பீகார் மாநிலத்தில் ஆட்டோ ரிக்க்ஷா -பேருந்து மோதி  விபத்து - 4 பேர் உயிர் இழப்பு, 11 பேர்படுகாயம்
பாகல்பூர், 25 பிப்ரவரி (ஹி.ச.) பீகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் தயாள்பூர் அருகில் தேசிய நெடுஞ்சாலை எண் 31-ல் சென்று கொண்டிருந்த இரண்டு ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு தனியார் பேருந்து ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விப
பீகார் மாநிலத்தில் ஆட்டோ ரிக்க்ஷா-பேருந்து மோதல் விபத்தில் 4 பேர் மரணம்


பாகல்பூர், 25 பிப்ரவரி (ஹி.ச.)

பீகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் தயாள்பூர் அருகில் தேசிய நெடுஞ்சாலை எண் 31-ல் சென்று கொண்டிருந்த இரண்டு ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு தனியார் பேருந்து ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில், நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 11 நபர்கள் காயமடைந்தனர்.

நவகாச்சியா காவல் துறை கண்காணிப்பாளர் பிரேர்ன குமார் அவர்கள் இந்த விபத்து குறித்து தகவல் தெரிவித்தபோது,

விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறினார்.

மேலும், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அருகிலுள்ள காவல் நிலைய போலீசாரும் உதவிக்கு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அதிவேகமாக வந்த பேருந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

காயமடைந்த 11 நபர்களும் சிகிச்சைக்காக பாகல்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் வாகனங்களின் ஆவணங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM