தாய்பால் கேட்டு அழுத 2மாத குழந்தையை வாயில் துணி வைத்து அடைந்து நெருப்பில் போட்டு எரித்த கொடூர தாய்
தெலங்கானா, 25 பிப்ரவரி (ஹி.ச.) மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரா, மமதா தம்பதி ஹைதராபாத் துன்டிகள் பகுதியில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கூலி வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு மாத ஆண் குழந்த
கைது


தெலங்கானா, 25 பிப்ரவரி (ஹி.ச.)

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரா, மமதா தம்பதி ஹைதராபாத்

துன்டிகள் பகுதியில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு

ஒன்றில் கூலி வேலை செய்து வந்தனர்.

அவர்களுக்கு இரண்டு மாத ஆண் குழந்தை வாரிசு.

தந்தை ராஜேந்திரா வேலைக்கு சென்று இருந்த நிலையில் அந்த இரண்டு மாத வயது குழந்தை பசியை பொறுத்துக் கொள்ள தெரியாத மன நிலையில் தாய்ப்பால் கேட்டு

தாயிடம் அழுது அடம் பிடித்தான்.

குழந்தைக்கு பசிக்குமோ என்று கருதி பார்த்து பார்த்து நேரம் தவறாமல் பால் கொடுப்பது சாதாரண தாய்களின் என்றுமே மாறாத வழக்கம். ஆனால் இந்த வழக்கம் அந்த

வீட்டில் மாறியது.

இந்த தாய் பால் கேட்டு அழுத குழந்தையின் வாயில் துணியை வைத்து அடைத்து அவனுடைய

அழுகையை நிறுத்த முயன்றிருக்கிறார்.

சிறுவன் வேறு வகையில் அசைந்து, கை கால்களை உதறி தாய்க்கு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறான்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த கொடூர தாய் மகனென்றும் பாராமல் கை, கால்களை கட்டி வீட்டில் சோறு சமைப்பதற்காக வெந்து கொண்டிருந்த விறகு அடுப்பில் பெற்ற மகனை தூக்கிப்போட்டு அருகில் சித்தபிரம்மை பிடித்தவர் போல் உட்காந்து

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அழ இயலாத வகையில் வாயில்அடைக்கப்பட்டிருந்த துணி, அசைய இயலாத வகையில் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறு ஆகியவை அவனிடமிருந்து வெளிப்பட்ட எதிர்ப்பை

வெளி உலகத்திற்கு காண்பிக்க இயலாமல் தடுத்து நிறுத்தின.

இந்த நிலையில் அங்கு வந்த தந்தை ராஜேந்திரா விறகு அடுப்பில் மகன் வெந்து

கொண்டிருப்பதையும், பாசத்துடன் பாலூட்டி சீராட்டி பேணி பாதுகாக்க வேண்டிய தாய்

வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து மயங்கி சரிந்தார்.

சற்று நேரத்தில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட ராஜேந்திரா அளித்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் அந்த கொடூர தாயை கைது செய்து காவல்

நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

வீட்டில் சோறு வேக வேண்டிய அடுப்பில் வெந்து இறந்து போன குழந்தையின் உடலை

கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள காந்தி அரசு

மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam