Enter your Email Address to subscribe to our newsletters

லண்டன், 25 பிப்ரவரி (ஹி.ச.)
உக்ரைன்- ரஷ்யா போர் ஐந்தாவது ஆண்டில் நுழையும் இந்தத் தருணத்தில், உக்ரைனுக்கான ஆதரவை இரட்டிப்பாக்க பிரிட்டன் உறுதி பூண்டுள்ளது என கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறுகையில்,
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் இந்த யுகத்தின் முக்கியமான ஒரு பிரச்னையாகும். உக்ரைன் மக்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பிரிட்டன் உங்களுடன் துணை நிற்கும். இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையில் வலிமையான ஆதரவை அளிக்கும். ஆகையால், இன்று நாங்கள் புதிய ஆதரவை அறிவிக்கிறோம். அத்துடன் உக்ரைனுக்கு எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு காலம் நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.
போர் 5வது ஆண்டில் தொடரும் நேரத்தில் உக்ரைனுக்கான ஆதரவை அதிகப்படுத்துகிறோம். ஒரு நிலையான அமைதி ஏற்படும் வரை நாங்கள் அவர்களுக்குப் பக்கபலமாக இருப்போம். தற்போது நடைபெற்று வரும் போரில் ரஷ்யா வெற்றி பெறவில்லை, மேலும் அவர்கள் இந்தப் போரில் வெற்றி பெறவும் முடியாது.
உக்ரைன் தைரியமாக புடினின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு செயலாற்றி வருகிறது.
என்று குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / JANAKI RAM