சென்னையில் தனியார் மருத்துவமனையில் ஊசி போட்ட இளம் இளைஞர் உயிரிழப்பு
சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம் எஸ் முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் 31. இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு அளவில் தனது தாயாரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை அருகில் உள்ள தனியார் க
பலி


சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம் எஸ் முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் 31. இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு அளவில் தனது தாயாரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை அருகில் உள்ள தனியார் கிளினிக் சென்று வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்னை வியாசர்பாடி அடுத்த

புளியந்தோப்பு கன்னிகாபுரம் பிரிட்டன்ஸ் சாலையில் உள்ள தனியார் கிளினிக் சென்றுள்ளார்.

அதன் பிறகு இரவு புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வேறு ஒரு தனியார்

மருத்துவமனை முன்பு வினோத்குமார் மயங்கிய நிலையில் இருப்பதாக அவரது தாயாருக்கு

தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர்.

வினோத்குமாரின் அண்ணன் சதீஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத்குமாரை

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் வினோத்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து உயிரிழந்த வினோத்குமாரின் அண்ணன் சதீஷ்குமார் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தம்பி வினோத்குமார் முதலில் புளியந்தோப்பு

கன்னிகாபுரம் பிரிட்டன்ஸ் சாலையில் உள்ள தனியார் கிளினிக் சென்றுள்ளார் அங்கு முதல் உதவி அளித்து அவருக்கு ஊசி போட்டுள்ளனர் ஊசி போட்டதும் உடல்நிலை

மோசமானதால் அவரை அருகில் இருந்த வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அப்போது அவர் அந்த

மருத்துவமனை வெளியிலேயே மயக்கம் அடைந்துள்ளார். அதன் பிறகு நான் சென்று அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்திருப்பது

தெரிய வந்தது.

முதலில் எனது தம்பி வினோத் குமாருக்கு மருத்துவம் பார்த்து ஊசி போட்டதில் ஏதோ தவறு நடந்துள்ளது எனவே அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க

வேண்டும் என உயிரிழந்த வினோத்குமாரின் அண்ணன் சதீஷ்குமார் புளியந்தோப்பு காவல்

நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam