Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை வேப்பேரி பகுதியில் தொழிலதிபர் மனைவிகளை குறிவைத்து பணம் மற்றும் நகைகளை பறித்த மோசடி குடும்பம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
அதே குடியிருப்பில் வசித்த குடும்பத்தினர், தொழிலதிபர் மனைவிகளுடன் நெருங்கிப் பழகி நம்பிக்கை ஏற்படுத்திய பின்னர், அவர்களை தனிமையில் சிக்கவைத்து வீடியோ பதிவு செய்து மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த மிரட்டலை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை பறித்துள்ளனர்.
மேலும் இதே பாணியில் பல பெண்களிடமும் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து, மோசடியில் ஈடுபட்ட தாய் மற்றும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
முக்கிய குற்றவாளி தலைமறைவாக இருப்பதால் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ