Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 பிப்ரவரி (ஹி.ச.)
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு எனும் என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்டுள்ள 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்பது தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம், உச்சநீதிமன்றத்தில் இன்று எழுப்பப்பட்டது.
நீதிமன்றம் கூடியதும், தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் மூத்த வக்கீல் கபில் சிபல் நீதித்துறையில் ஊழல் என்பது தொடர்பான பாடம் குறித்து புகார் எழுப்பினார்.
கபில் சிபல் கூறுகையில், நீதித்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.
இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது:
நீதித்துறைக்கு யாரும் களங்கம் கற்பிப்பிதை நான் அனுமதிக்க மாட்டேன். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் நான் என் கடமையை செய்கிறேன்.
இது ஒரு திட்டமிட்ட செயல் என தோன்றுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியும். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தன் கடும் அதிருப்தியை பதிவு செய்வதாக கூறிய தலைமை நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / vidya.b