Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 25 பிப்ரவரி (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி கிராமம் எழுகாம்வலசு பகுதியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் தற்காலிக தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
அந்த பகுதியைச் சேர்ந்த சண்முகம் (45), ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவம் நடைபெற்ற நாளில், சிறுமி வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த சண்முகம், மது போதையில் வீட்டிற்குள் சென்று சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பியபோது, நடந்த சம்பவத்தை சிறுமி தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சண்முகத்தின் மீது குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு சட்டம் (போக்சோ) கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN