தேர்தல் 'இலவச' வாக்குறுதித் திட்டங்களை அறிவிக்கத் தடை கோரிய மனு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
புதுடெல்லி,25 பிப்ரவரி (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதித் திட்டங்களை அறிவிப்பதற்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ்
தேர்தல் 'இலவச' வாக்குறுதித் திட்டங்களை அறிவிக்கத் தடை கோரிய மனு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை


புதுடெல்லி,25 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதித் திட்டங்களை அறிவிப்பதற்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பாக வழக்குரைஞர் ஜெய் சுகின், நரேந்தர் குமார் வர்மா ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,

தேர்தலுக்கு முன்னர் இலவச வாக்குறுதித் திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதன் காரணமாக மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.

அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதித் திட்டங்களால் ஏற்படும் நிதி சார்ந்த பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.

எனவே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் இலவச வாக்குறுதித் திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்குத் தடை விதிக்க மத்திய அரசிற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டும்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (புதன்கிழமை) விசாரிக்கிறது.

Hindusthan Samachar / JANAKI RAM