இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வருகை
சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்பட 15 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வருகை


சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்பட 15 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12.55 மணிக்கு சென்னை வந்தனர்.

இந்திய தேர்தல் அதிகாரிகளை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரவேற்றார்.

பின்னர், 1.30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த தனி விமானத்தில் புதுச்சேரி புறப்பட்டு சென்றனர்.

புதுச்சேரியில் இன்று மாலை தேர்தல் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். இன்று இரவு புதுச்சேரியில் தேர்தல் அதிகாரிகள் தங்குகிறார்கள்.

இதைத்தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சென்னை, எம்ஆர்சி நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்கள். அங்கு இன்று மாலை தமிழக தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள்.

பின்னர் 2வது நாளாக, நாளையும் தமிழக தேர்தல் தொடர்பான அரசு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், தேர்தல் தொடர்பான மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.க்கள், கமிஷனர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோருடனும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டு நாளை இரவு அல்லது 28ம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாள் நடைபெறும் ஆலோசனையின்போது, இந்த இரண்டு மாநிலங்களிலும் எந்த தேதியில் தேர்தல் நடத்துவது மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b