Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீநகர், 25 பிப்ரவரி (ஹி.ச.)
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கேரள மாநிலத்தின் பெயரை மாற்றும் முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அறிவித்தார்.
கேரள மாநில பெயரை மாற்றிய நிலையில், தனது மாநிலத்தின் பெயரையும் மாற்றும் திட்டம் நீண்ட காலமாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி தெரிவித்தார்.
இந்த நிலையில், கேரளத்தை மாற்ற முடியும் என்றால் ஏன் மேற்கு வங்க பெயரை மாற்ற முடியாது? என மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா,
மற்ற மாநிலங்களும் பெயர் மாற்றங்களை முன்மொழிந்துள்ளன. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
எதிர்காலத்தில் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் இதேபோன்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டால், மத்திய அரசு அதற்கு உரிய பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
காஷ்மீர் வருகை தந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனையும் முதல்வர் வரவேற்றார். காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழாவில் சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை கலந்து கொள்கிறார்.
குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாகக் காஷ்மீருக்கு வருகை தந்துள்ள நிலையில் நாங்கள் அவரை வரவேற்கிறோம் என்று உமர் அப்துல்லா கூறினார்.
Hindusthan Samachar / vidya.b