கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 4 மற்றும் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி, 25 பிப்ரவரி (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 194-வது அவதாரத் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 4 ஆம் தேதி (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழ
Kanyakumari


கன்னியாகுமரி, 25 பிப்ரவரி (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 194-வது அவதாரத் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 4 ஆம் தேதி (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி மார்ச் 10 ஆம் தேதி (செவ்வாய்) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேற்குரிய நாள்களில் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகள் இருப்பின், தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும்,

விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 7 மற்றும் மார்ச் 14 ஆகிய சனிக்கிழமைகள் வேலை நாள்களாக பின்பற்றப்படும் எனவும் அம்மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b