கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை - மீன் பிடிக்க தடை
ராமேஸ்வரம், 25 பிப்ரவரி (ஹி.ச.) ராமேஸ்வரம்,பாம்பன் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 20000 க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் 3000க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு
மீனவர்கள்


ராமேஸ்வரம், 25 பிப்ரவரி (ஹி.ச.)

ராமேஸ்வரம்,பாம்பன் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 20000 க்கு

மேற்பட்ட விசைப்படகுகளில் 3000க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடி

தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கச்சத்தீவு திருவிழா வருகின்ற 27, 28 இரண்டு தினங்கள் தினங்கள்

நடைபெறுகிறது.

இதன் காரணமாக இன்றிலிருந்து வருகின்ற 28ஆம் தேதி வரை விசை

படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்பட மாட்டாது என மீன்வளத்துறை

அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக 2000க்கும் மேற்பட்ட விசை படகு

மீனவர்களும் 3000-க்கும் மேற்பட்ட நாடு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு

செல்லாமல் படகுகளை கரையோரம் நங்கூரம் விட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

பாதுகாப்பு கருதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதித்ததாக

மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam