Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 25 பிப்ரவரி (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த புல்லேரி கிராமத்தைச்
சேர்ந்தவர் கோவிந்தராஜ்
வயது 36, முடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்
முத்து வயது
32 ஆகிய இருவரும் நண்பர்கள் இவர்கள் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள
ஏர்போர்ட்டில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பராக பணிபுரிந்து வரும் நிலையில் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருக்கழுக்குன்றத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நோக்கி சென்றபோது கீரப்பாக்கம் பகுதியில் எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதியதில் கோவிந்தராஜ் மற்றும் முத்து ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை
மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கனரக வாகனம்
குறித்து வழக்கு பதிவு செய்த திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில்
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam