காதலி தம் அடித்ததை கண்டித்த காதலன் - அதிமுக பிரமுகர் உதவியோடு காதலனை ஆட்டோவில் கடத்திய காதலி
சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் பாலு. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பாலுவுக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகி விட்டது. இவருக்கும் அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக ப
Bs


சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் பாலு. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பாலுவுக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகி விட்டது.

இவருக்கும் அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் கணவன் மனைவி போலவே வாழ்ந்து வந்தனர். அந்த பெண்ணுக்கு தேவையான செலவுகளை செய்துள்ளார். ரூ. 10 லட்சம் செலவு செய்து ஆடம்பரமாக வாழ வைத்ததாக கூறப்படுகிறது.

தங்க நகைகள் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் ஆசிரியை வேலை விட்டு விட்டு ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதையடுத்து அந்த பெண் ஐடி நிறுவன வேலைக்கு சென்ற பிறகு பாலுவை சந்திப்பதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் பாலு அந்த பெண் வேலை செய்யும் நிறுவனத்திற்கே சென்றார். அங்கே அந்த பெண் சிகரெட் பிடித்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனை பாலு கண்டித்ததாக தெரிகிறது.

உடனே அவர் இது தன்னுடைய விருப்பம் என்றும் என்ன வேணும்னாலும் செய்வேன் என கூறி வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. பாலு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண் தனக்கு தெரிந்த புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த குமார், அதிமுகவைச் சேர்ந்த சூர்யா, ரவுடி கானா என்ற ஆறுமுகம் உள்பட 4 பேரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

அவர்கள் அந்த பெண் மூலமாக பேசி பாலுவை ராயப்பேட்டை பொன்னியம்மன் கோவில் தெருவுக்கு வரவைத்து ஆட்டோவில் கடத்திச் சென்றனர். பிறகு அடித்து உதைத்து செல்போன், 2 சவரன் தங்க நகை ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து பாலு இது குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ