காம்பவுண்ட் ரொம்ப முக்கியம் - காண்ட்ராக்டரிடம் கண்டிப்போடு உத்தரவிட்ட அமைச்சர் சேகர்பாபு
சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி, புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் ஆடுதொட்டி புச்சர் கிரவுண்ட் கட்டுமான பணியை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்
சேகர்பாபு


சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி, புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் ஆடுதொட்டி புச்சர் கிரவுண்ட் கட்டுமான பணியை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காண்ட்ராக்டரிடம் எப்போது பணிகள் நிறைவடையும்? இன்னும் பத்து நாட்களில் ஆடு தொட்டி புச்சர் கிரவுண்ட்டை முதலமைச்சர் திறந்து வைக்கும் வகையில் பணிகள் விரைவாக முடிவடைய வேண்டும் என கேட்டு பல்வேறு பணிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மேலும், பல்வேறு இடங்களையும் பார்வையிட்ட அமைச்சர் காம்பவுண்ட் இல்லாததை பார்த்து, எங்கு காம்பவுண்ட் வேலையெல்லாம் தொடங்கவே இல்லை? காம்பவுண்ட் ரொம்ப முக்கியம், என அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பின்னர் புளியந்தோப்பு திருவேங்கடம் சாமி தெருவில் கட்டப்பட்டு வரும் சென்னை ஆரம்பப் பள்ளி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின்னர்,

செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

வாக்களிக்க தகுதியானவர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு விடக்கூடாது. வாக்களிக்க தகுதியில்லாத யாரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று விடக்கூடாது இதுதான் திமுக BLA க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதனை ஏற்று திறம்பட செயலாற்றினோம் என்றார்.

Hindusthan Samachar / GOKILA arumugam