சென்னை மருத்துவ கல்லூரிக்கு மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல் தானம்
சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச) இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கடந்த திங்கள்கிழ
சென்னை மருத்துவ கல்லூரிக்கு மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல் தானம்


சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச)

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை கடந்த திங்கள்கிழமை இரவு முதலே பின்னடைவை சந்தித்து வந்தது.இந்த நிலையில் இன்று காலை முதலே அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் செயற்கை சுவாசம் உள்ளிட்ட கருவிகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் காலமானார்.

தனது இறப்புக்கு பிறகு உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்க வேண்டும் என 2016ஆம் ஆண்டு நல்லகண்ணு தெரிவித்திருந்தார்.

அதன்படி அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுகிறது.

நல்லகண்ணுவின் உடல் இன்று மாலை 4:30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ கட்சியின் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.

நாளை (பிப்ரவரி 26) மாலை 4 மணி வரை அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அவரது விருப்பப்படியே உடல் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது.

Hindusthan Samachar / vidya.b