இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி அறைக்கம்பத்தில் பறக்க விடப்படும் - கம்யூனிஸ்ட் வீரபாண்டி
சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச) கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த ஒரு மாதமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின
Communist Veerapandiyan


R.Nallakannu


சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச)

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த ஒரு மாதமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்தித்த போது பேசியதாவது,

இன்று மாலை 5 மணிக்கு கட்சி அலுவலகத்தில் அவரது உடலை அஞ்சலிக்காக வைக்க முடிவு செய்துள்ளோம்

இன்று மாலை 5 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை பாலன் இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்

நாளை 3 மணி முதல் 5 மணி வரை கட்சித் தோழர்களின் அணிவகுப்புடன் அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்க இருக்கிறோம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி ஒரு வாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி அறைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.

தமிழக முதலமைச்சரிடம் அரசு மரியாதை குறித்து கோரிக்கை வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு,

அரசு மரியாதை வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க அவசியம் இல்லை, அவர் தேசிய தலைவர்களுக்கு எவ்வித அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று அறிந்த, பெரும் மனப்பான்மை உடையவர்.

அவரே மறைந்த தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அரசு மரியாதை வழங்குவார் என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ