Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச)
இன்று சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரயில்களை இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இறுதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
பூந்தமல்லி - போரூர் வரை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, அனைத்து கட்ட சோதனை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது போரூர் -வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்கி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்ரி தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர்.
போரூர் - வடபழனி இடையே கட்டமைப்புகள், சிக்னல் தொழில்நுட்பம், உயர்மட்ட மின்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, இத்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டு வருகின்றன..
இந்த இறுதி கட்ட சோதனைக்கு பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்ரி இந்திய ரயில்வே வாரியத்திடம் ஆவணங்களை சமர்ப்பிக்க அதனை தொடர்ந்து இந்திய ரயில்வே வாரியம் மெட்ரோ ரயில்களை இயக்க முறையான அனுமதி சான்றிதழ் வழங்கும். இந்திய ரயில்வே வாரியத்தின் சான்றிதழை பொறுத்தவரை வெகு விரைவில் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ