Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 பிப்ரவரி (ஹி.ச.)
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழ், ஆபாசமான தகவல்களை மின்னணு முறையில் பரப்புவது தணடனைக்குரிய குற்றமாகும். கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு இத்தகைய சிறிய அளவிலான ஓ.டி.டி. தளங்களைக் கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதாகக் கூறி, 5 ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்தத் தளங்கள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, சந்தாதாரர்களை கவர்வதற்காக அநாகரீகமான மற்றும் வக்கிரமான காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam