Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 பிப்ரவரி (ஹி.ச.)
பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக டெல்லியிலிருந்து இன்று தனி விமானத்தில் புறப்பட்டார்.
அவருடன் உயர்மட்ட குழுவினரும் பயணிக்கின்றனர்.
இந்த பயணத்தின்போது, இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றவுள்ளார்.
இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும்.
மேலும், இஸ்ரேலில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து கலந்துரையாட உள்ளார். இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜோக்கையும் அவர் நேரில் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்பு பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்ட செய்தியில்,
எனதருமை நண்பரின் அழைப்பின் பேரில் இஸ்ரேல் செல்கிறேன்.
இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும், வலுவான மற்றும் பன்முகத் தன்மை கொண்ட நட்புறவையும் பகிர்ந்து கொள்கின்றன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், விவசாயம், நீர் மேலாண்மை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க நான் ஆவலுடன் உள்ளேன்.
என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM