நாளை பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - ராமதாஸ் அறிவிப்பு
விழுப்புரம், 25 பிப்ரவரி (ஹி.ச.) சட்டசபை தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக தரப்பு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. அதேவேளை, ராமதாஸ் தலைமையிலான பாமக தரப்பு தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலைய
நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம் - ராமதாஸ் அறிவிப்பு


விழுப்புரம், 25 பிப்ரவரி (ஹி.ச.)

சட்டசபை தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக தரப்பு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது.

அதேவேளை, ராமதாஸ் தலைமையிலான பாமக தரப்பு தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக மாவட்டச் செயலர்கள் மற்றும் வன்னியர் சங்க மாநில, மாவட்டத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நாளை (பிப்ரவரி 26) நடைபெறும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், மாவட்டத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நிறுவனர் தலைவர் (ராமதாஸ்) தலைமையில் நடைபெறவுள்ளது.

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளாா்.

Hindusthan Samachar / vidya.b