Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச)
பாமகவில் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக்கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில்,பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்போது, ராமதாஸ் மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை மார்ச் ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ