பொள்ளாச்சி அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை மரங்கள் சேதம்
கோவை, 25 பிப்ரவரி (ஹி.ச.) பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை மேகமூட்டத்துடன் காணப்ப
வாழை மரங்கள்


கோவை, 25 பிப்ரவரி (ஹி.ச.)

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை மேகமூட்டத்துடன்

காணப்பட்டு நேற்று இரவு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

குறிப்பாக வடக்கிபாளையம்

சி.கோபாலபுரம், கருமாண்ட கவுண்டனூர், ஆர்.பொன்னாபுரம் T.நல்லி கவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக சி.கருமாண்ட கவுண்டனூர் பகுதியில் பாலசபரீஸ்என்பவர் தோட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.

மேலும் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தென்னை மற்றும் வாழை மரங்கள் பயிரிட்டுள்ளனர் ஒரு சில இடங்களில்நூற்றுக்கணக்கான வாழை மரங்களும் சேதமடைந்துள்ளது.

ஏக்கருக்கு சுமார் இரண்டரை லட்சம் செலவு செய்து பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால் தமிழக அரசு இந்த பகுதியில் முழுமையாக ஆய்வு செய்து

சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam