பிரதமர் மோடி காசா மக்களுக்கு நீதி வழங்குவார் என எதிர்பார்க்கிறோம் - பிரியங்கா காந்தி
புதுடெல்லி, 25 பிப்ரவரி (ஹி.ச.) ஒன்பது வருடங்களுக்குப் பிறகு இன்று இஸ்ரேலுக்கு மீண்டும் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றமான கினெஸ்செட்டில் உரையாற்றவுள்ளார். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான புதிய பாதுகாப்பு தொழில் நுட்பங்களை
பிரதமர் மோடி காசா மக்களுக்கு நீதி வழங்குவார் என எதிர்பார்க்கிறோம் - பிரியங்கா காந்தி


புதுடெல்லி, 25 பிப்ரவரி (ஹி.ச.)

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு இன்று இஸ்ரேலுக்கு மீண்டும் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றமான கினெஸ்செட்டில் உரையாற்றவுள்ளார்.

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான புதிய பாதுகாப்பு தொழில் நுட்பங்களை கூட்டாக தயாரிப்பது மற்றும் மேம்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாக உள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், காசாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது குறித்து குறிப்பிட்டு, அவர்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுப்பார் என்று நம்புகிறோம்.

இந்தியா உலகிற்கு உண்மை, அமைதி மற்றும் நீதியின் ஒளியை தொடர்ந்து எடுத்துக்காட்ட வேண்டும்.

என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM