பூனை குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனம் விபத்து - அரசு பெண் ஊழியர் உயிரிழப்பு
ராணிப்பேட்டை, 25 பிப்ரவரி (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள வேம்பி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி சத்தியபிரியா இவர் மாம்பாக்கம் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வந்தார். மாவட்ட ஆட்சியர்
Death


ராணிப்பேட்டை, 25 பிப்ரவரி (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள வேம்பி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி சத்தியபிரியா இவர் மாம்பாக்கம் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று தனக்கு கீழ் பணியாற்றும் நியாய விலைக் கடை ஊழியர் முரளியின் இருசக்கர வாகனத்தில் கலவை நோக்கி வந்துள்ளார்.

அப்போது கணியந்தாங்கல் கிராமத்தில் பூனை குறுக்கே வந்ததால் திடீரென போட்ட பிரேக்கால் பின்னால் அமர்ந்து இருந்த சத்தியபிரியா நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவயிடத்திலையே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த கலவை காவல்துறையினர் உடனடியாக விபத்தில் உயிரிழந்த சத்தியபிரியாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கலவை காவல் நிலைய ஆய்வாளர் திருநாவுக்கரசு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பூனை குறுக்கே வந்ததால் திடீரென போட்ட பிரேக்கால் அரசு பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN