கொடைக்கானலில் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை திடீரென விரட்டிய  தெருநாய் கூட்டம்
திண்டுக்கல், 25 பிப்ரவரி (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும், தங்கும் விடுதிகள் உள்ள பகுதிகளிலும் தெரு நாய்கள
தெருநாய்


திண்டுக்கல், 25 பிப்ரவரி (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தெரு

நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் நடமாடும்

பகுதிகளிலும், தங்கும் விடுதிகள் உள்ள பகுதிகளிலும் தெரு நாய்கள் கூட்டம்

கூட்டமாக உலா வருவதுடன், அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை

துரத்துவதும், கடித்து குதறுவதுமாக நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான முதலியார்புரம் பகுதியில்

உள்ள வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அந்த பகுதியில் திடீரென

முற்றுகையிட்ட 5க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சிறுவனை விரட்டியுள்ளது.

இதில் சிறுவன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தெருநாய்களை

விரட்டியதால் தெரு நாய்கள் அங்கிருந்து ஓடிவிட்டது.

தொடர்ந்து நாளுக்கு நாள் கொடைக்கானல் நகர் பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம்

கூட்டமாக உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம்

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam