கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் மூலம் சென்னையில் 18 லட்சம் செலான்கள் அனுப்பப்பட்டுள்ளது - போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர்
சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.) கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் மூலம் சென்னையில் 18 லட்சம் செலான்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் டெலிவரி ஊழியர்கள் மீது 43 வழக்குகள், 5 உயிர
Cctv


சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.)

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் மூலம் சென்னையில் 18 லட்சம் செலான்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்தில் டெலிவரி ஊழியர்கள் மீது 43 வழக்குகள், 5 உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு மட்டும் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாக 2,88,618 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியதாக 6976 வழக்குகளும், தவறான பாதையில் வாகனத்தை இயக்கியதாக 4,52,268 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக டெலிவரி ஊழியர்கள் மீது மட்டும் கடந்த 2025 ஆம் ஆண்டு 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் ஐந்து உயிர் இழப்புகளும், 11 கடுங்காயம் மற்றும் 27 லேசான காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் சிசிடிவி கேமராக்கள் மூலம் 18 லட்சம் செலான்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது..

பெண் டெலிவரி ஊழியர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து காவல் இணை ஆணையர் விஜயகுமார், இந்தியாவில் ஒரு நாளைக்கு 485 உயிரிழப்பு விபத்துகள் ஏற்படுவதாகவும், இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 20 பேர் உயிரிழப்பதாகவும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு பேர் உயிரிழப்பதாகவும் ஒவ்வொரு நாளுக்கும் 51 நபர்கள் தமிழ்நாட்டில் இறப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024 ஆம் வருடம் சாலை விபத்தில் 536 நபர்கள் உயிரிழப்பதாகவும், 2025 ஆண்டில் 496 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ