Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 25 பிப்ரவரி (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் லால்குடியில் செயல்பட்டு வரும் நீதிமன்றம் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இயங்கி வருவதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு தனி கட்டிடம் அமைக்க அரசிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
புதிய நீதிமன்ற கட்டிடம் அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சிராப்பள்ளி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் பெரும் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்திலிருந்து சுமார் 350-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பேரணியாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற் கொண்டனர்.
பின்னர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், லால்குடியில் புதிய நீதிமன்ற கட்டிடம் அமைக்க நிலம் ஒதுக்கி விரைவாக கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
இந்த போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் சுற்றுவட்டாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு கருதி போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
புதிய நீதிமன்ற கட்டிடம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN