விழுப்புரத்தில் வருவாய் துறை சங்கங்களின் ஒன்பது அம்ச கோரிக்கைகள் – தொடர்  காத்திருப்பு போராட்டம்
விழுப்புரம், 25 பிப்ரவரி (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தொடர் காத்திருப்பு போராட்டம்
போராட்டம்


விழுப்புரம், 25 பிப்ரவரி (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தொடர் காத்திருப்பு போராட்டம்

நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம்

மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை அரசு

உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், புஷ்பகந்தன், வள்ளல் பாரி

உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam