Enter your Email Address to subscribe to our newsletters

பிஜாப்பூர், 26 பிப்ரவரி (ஹி.ச.)
நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
இதையடுத்து, அதற்கான நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சத்தீஸ்கர், தெலங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இயங்கி வரும் நக்சல்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி ஆற்று பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, படையினரை நோக்கி நக்சலைட்டுகள் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில், 2 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
சீருடையில் இருந்த அவர்களிடம் இருந்து எஸ்.எல்.ஆர். துப்பாக்கி, இன்சாஸ் ரக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனை பிஜாப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திரா யாதவ் இன்று உறுதிப்படுத்தி உள்ளார்.
தொடர்ந்து அந்த பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b