கேரள பெண் அமைச்சர் மீதான தாக்குதல் சம்பவம் திட்டமிட்ட பொய் - எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், 26 பிப்ரவரி (ஹி.ச.) கேரளம் மாநிலத்தில் நடைபெற்று வரும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியில் வீணா ஜார்ஜ் அம்மாநில சுகாதார துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று (25
கேரள பெண் அமைச்சர் மீதான தாக்குதல் சம்பவம் திட்டமிட்ட பொய்  - எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் குற்றச்சாட்டு


திருவனந்தபுரம், 26 பிப்ரவரி (ஹி.ச.)

கேரளம் மாநிலத்தில் நடைபெற்று வரும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியில் வீணா ஜார்ஜ் அம்மாநில சுகாதார துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று (25.02.2026) ரயிலில் பயணம் செய்ய வேண்டி கண்ணூர் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு, அமைச்சருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியின் நிர்வாகிகள் வீணா மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த, கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஏ.என். ஷம்சீர் இது பற்றிக் கூறுகையில், எதிர்க்கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமைச்சர் வீணாவிற்கு கைகள் மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காயம்பட்ட அமைச்சர் வீணா ஜார்ஜ் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி.ஜெயராஜன் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த வி.டி. சதீசன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது,

காங்கிரஸ் தொண்டர்கள் மந்திரிக்கு அருகிலேயே கூட செல்லவில்லை. ரெயில்வே போலீசாரும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். தாக்குதலுக்கான எந்த சான்றும் கிடைக்கவில்லை.

கேரள சுகாதார மந்திரியை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கி விட்டனர் என முதல்-மந்திரி உள்பட சி.பி.எம். கட்சியின் தலைவர்கள், திட்டமிட்ட பொய்யை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இந்த பொய்யால், மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. மந்திரிக்கு அருகே ஒரு போராட்டக்காரர் கூட செல்லவில்லை என எல்லா பத்திரிகையாளர்களுக்கும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரியும்.

காங்கிரஸ் தொண்டர்களில் 4 அல்லது 5 தொண்டர்களே இருந்தனர்.

அவர்கள் அனைவரையும் 30-35 போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b