திமுகவுக்கு குட் பை சொல்லுகிறதா காங்கிரஸ்? தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என பரபரப்பு தகவல்
தமிழ்நாடு, 26 பிப்ரவரி (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவை காண தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை உறுதி செய்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆளும் கட்சியான திமுக ஏற்கனவே உள்ள கூட்டணிய
தவெக காங்கிரஸ்


தமிழ்நாடு, 26 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவை காண தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை உறுதி செய்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஆளும் கட்சியான திமுக ஏற்கனவே உள்ள கூட்டணியை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. புதிதாக மக்கள் நீதி மையம், தேசிய முற்பகுதி திராவிட கழகம் ஆகிய கட்சிகளையும் இணைத்துள்ளது.

இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இதுவரை காங்கிரஸ் கட்சி அழைக்கப்படாது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

திமுகவுடன் கூட்டணி குறித்து முன்னேற்றம் இல்லாத நிலையில், டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள தேர்தலை முன்னிட்டு விஜய் தலைமையிலான கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸில் ஒருதரப்பு ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் இறுதியில் தங்களுடன் இணையும் என தவெக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை சூசகமாக உறுதி செய்துள்ளார்.

ஆனால் அத்த தகவலுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam