Enter your Email Address to subscribe to our newsletters

கண்ணூர், 26 பிப்ரவரி (ஹி.ச.)
கேரள மாநிலம் கண்ணூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது,
நமது விவசாயிகளும், விவசாயமும் தான் இந்தியாவின் அடித்தளம் என்ற எளிய உண்மை புரிந்து கொள்ளப்படவில்லை. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற அனைத்தையும் பற்றி நீண்ட சொற்பொழிவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்திய விவசாயியின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது என்று யாரும் கூறுவதில்லை.நமது விவசாயிகள் மதிக்கப்படும்போதும், பாதுகாக்கப்படும் போதும் தான் இந்தியா வெற்றி பெற முடியும்.
சோயா பீன்ஸ், சோளம், பழங்கள் ஆகியவற்றை இந்தியாவில் விற்க அமெரிக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எந்த இந்திய பிரதமரும் இதனை செய்ய மாட்டார்.
கடந்த 4 மாதங்களாக, இந்தியா அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்தடைபட்டு இருந்தது. விவசாயம் காரணமாக தடைபட்டு இருந்தது. அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய விவசாய சந்தையை திறந்து விட அனுமதிக்கவில்லை. இதனையடுத்து பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் மிரட்டினார்.
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை மீது என்னை பேச அனுமதிக்கவில்லை. அமித்ஷாவும், பிரதமரும், சபாநாயகரும் என்னை பேச அனுமதிக்கவில்லை. வரலாற்றில் முதல்முறையாக குடியரசு தலைவர் உரை மீது எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கவில்லை. என்னை தடுத்தது ஏன்?
பிரதமர் பற்றி இரண்டு விஷயங்களைப் பற்றி நான் பேசப்போகிறேன் என்பது அவர்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b