Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 26 பிப்ரவரி (ஹி.ச.)
கடலூர் கங்கன்குப்பம் ஊராட்சி பகுதியில் கடந்த இரு தினங்களாக திடீரென மயங்கி விழுந்து இருக்கும் காக்கா இவற்றை கொத்தி தின்ன முயன்ற கோழிகளும் இறந்துவிட்டது.
இதனால் இப்பகுதி பொதுமக்கள் பறவைக்காய்ச்சல் இருக்குமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மருத்துவ குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் காகத்தின் எச்சத்தை மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் பரிசோதனையின் முடிவிற்கு பிறகு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் காகம் எப்படி இருந்தது என்று தெரிய வரும் தற்பொழுது சம்பவ இடத்தில் பத்துக்கு மேற்பட்ட உதவி இயக்குனர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு சுகாதார துறை பூச்சியில் வல்லுநர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சுகாதாரப் பணியாளர்கள் இறந்த காகத்தினை ப்ளீச்சிங் பவுடர் தெளித்து எடுத்து புதைத்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam