Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச)
திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கடந்த 20 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
7 வது நாளான இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.
இதுவரை சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் விநியோக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடவும்,
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர்செல்வத்தின் மகன் கதிரவன் புவனகிரி மற்றும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடவும்,
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அதே தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கோரியும்.
திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தை சேர்ந்த மருத்துவர் தருண் வீரபாண்டி & சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடவும்,
திமுக மாணவரணி மாநில துணை அமைப்பாளர் பூரண சங்கீதா காரைக்குடி தொகுதியில் சீமானை எதிர்த்து போட்டியிடவும் விருப்பமனு வழங்கியுள்ளனர்.மேலும் பல நிர்வாகிகள் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ