Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 28 ஆம் தேதியும், மார்ச் மாதம் முதல் தேதியும் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
28 ஆம் தேதி இரவு தனி விமானத்தின் மூலம் சென்னை வரும் அவர், அன்றைய தினம் இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
அடுத்த நாள் அதாவது மார்ச் ஒன்றாம் தேதி ஹெலிகாப்டர் வாயிலாக சென்னையில் இருந்து புதுச்சேரிக்குச் செல்கிறார். புதுச்சேரி நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கும் பிரதமர் செல்கிறார். அதன் பிறகு மார்ச் முதல் தேதியன்று இரவு பிரதமர் தன்னுடைய தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லிக்குப் புறப்படுகிறார்.
பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி கிண்டி, மீனம்பாக்கம் போன்ற இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் டிரோன்கள் பறக்க முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் செல்லும் வழி முழுவதும் பலத்த காவல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிண்டி ஆளுநர் மாளிகையும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM