அமலாக்கத்துறையின் தலைமை அலுவலக இயக்குனர் ராகுல் நவீன் சென்னை வருகை - தமிழக அமலாக்கத்துறை வழக்குகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.) சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அமலாக்கத்துறை இயக்குனர் ராகுல் நவீன் சென்னை வருகை தந்துள்ளார். இந்த நிதியாண்டில் 500 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக
Rahul


சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.)

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அமலாக்கத்துறை இயக்குனர் ராகுல் நவீன் சென்னை வருகை தந்துள்ளார்.

இந்த நிதியாண்டில் 500 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்குகளின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையின் டெல்லி தலைமையக இயக்குனர் ராகுல் நவீன் தலைமையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கௌஹாத்தியில் மாநாடு ஒன்று நடைபெற்றது.

இதில் அமலாக்கத்துறை வழக்குகள் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அந்த வகையில் அமலாக்கத்துறை வழக்குகள் குற்றப்பத்திரிகை மற்றும் நீதி விசாரணைக்கு குறைந்தது நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் எடுக்கப்படுவதாகவும் இனிவரும் காலங்களில் இரண்டு ஆண்டுகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை இயக்குனர் ராகுல் நவீன் மாநாட்டின் போது அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் 500 வழக்குகளுக்கு தொடர்பான குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு இதைவிட அதிகமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நீண்ட காலமாக கிடப்பில் உள்ள வழக்குகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் டெல்லி தலைமையக அமலாக்கத்துறை இயக்குனர் ராகுல் நவீன் சென்னைக்கு இன்று வருகை தர உள்ளார்.

இந்த பயணத்தின் போது முக்கியமாக தமிழகத்தில் உள்ள சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அமலாக்கத்துறை போடப்பட்ட வழக்குகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

முக்கியமாக திமுகவைச் சேர்ந்த கே என் நேரு ,செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு நிலையில் அமலாக்கத்துறை இயக்குனர் ராகுல் நவீன் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கருப்பு பணம் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழுவின் கூட்டம் தொடர்பாகவும் இயக்குனர் ராகுல் நவீன் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ