தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் மற்றும் குழுவினர் சென்னையில் இன்று ஆலோசனைக் கூட்டம்
சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச) தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் தலைமையில் ஏழு பேர் குழுவினர் நேற்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். பின்னர் புதுச்சேரி சென்று
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் மற்றும் குழுவினர் சென்னையில் இன்று ஆலோசனைக் கூட்டம்


சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச)

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் தலைமையில் ஏழு பேர் குழுவினர் நேற்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

பின்னர் புதுச்சேரி சென்று அம்மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து சென்னை திரும்பியுள்ள அதிகாரிகள் இன்று காலை எம்.ஆர்.சி., நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பெற்றனர். அவர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

மாலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.,க்கள், ஆணையர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி விரிவான தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யவுள்ளனர்.

இதை தொடர்ந்து நாளை சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய அரசின் 23 துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b