Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச)
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 60 ஆண்டுகளாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்துள்ளது.
இதுவரை 12 முறை ஒப்பந்தங்கள் ஏற்பட்டு ஊதிய உயர்வு தொழிலாளர்கள், அலுவலர்கள் பொறியாளர்கள் என அனைத்திற்கும் இணைந்தே வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்த முறை உயர்வினை தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்குவது என்றும் அலுவலர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழிலாளர்களையும் பொறியாளர்களையும் அலுவலர்கள் பிரித்தாலும் சுழற்சி நிர்வாகம் கையாள்கிறது என்றும்,
இந்தப் போக்கினை மாற்றி அரசு நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை கோரிக்கை கவனிக்காமல் தொழிலாளர்களுக்கு மட்டுமே ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர்களுக்கும் பொறியாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வினை இணைந்தே வழங்க கோரி அரசின் மற்றும் மின்வாரியத்தின் கவனத்தை ஈர்த்திட வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட அளவில் அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு சென்னையில் மின்வாரிய தலைமையகம் முன்பும் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவில் உள்ள தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு தொழிலாளர்கள் அலுவலர்களுக்கு இணைந்தே ஊதிய உயர்வு வழங்க வேண்டும் அவசியத்தை பணியாளர்களை பிரித்தாலும் நடவடிக்கை கைவிட வேண்டி வலியுறுத்தி கூறினர்.
Hindusthan Samachar / P YUVARAJ