Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 26 பிப்ரவரி (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் குடோன்
உள்ளது.
அந்த பகுதியில் டிப் டாப்பாக புல்லட் வாகனத்தில் வந்த நபர் ஒருவர் அந்த குடோனுக்குள் நுழைந்து தான் போலீஸ் என்று கூறி அங்கிருந்த பெண்ணிடம்
மிரட்டியதாக தெரிகிறது. அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் மேலே தெரிவது போல துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நீங்கள் யார் போலீஸா? என அவரை கேள்வி எழுப்பி தனது செல்போனில் வீடியோ எடுத்து அவரை விரட்டியுள்ளார்.
அதனால் அச்சமடைந்த
அந்த ஆசாமி அங்கிருந்து புல்லட் வாகனத்தில் ஏறி ஓட்டம் பிடித்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வீடியோ சமூக
வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் போலீசரும் விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam