Enter your Email Address to subscribe to our newsletters

தும்கா, 26 பிப்ரவரி (ஹி.ச.)
ஜார்கண்ட் மாநிலத்தில், அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில், தீப்பிடித்து எரிந்த 4 பெரிய லாரிகள் முற்றிலும் நாசமாயின.
தும்கா நகரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏற்றிச் சென்ற ஒரு வாகனத்தில் மற்ற வாகனங்கள் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு கனரக லாரிகளும் தீயில் கருகி சாம்பலாகிவிட்டன.
இந்த விபத்தில் பலர் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து,தும்கா மாவட்டத்தின் மூத்த அரசு அதிகாரி கவுசல் இது குறித்து கூறுகையில்,
எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு சென்ற வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் பின்புறமாக மோதியது. இதன் காரணமாக தீ பரவி, அந்த வாகனம் எரிய ஆரம்பித்தது.
இதே போல், ஒன்றன்பின் ஒன்றாக 4 வாகனங்கள் மோதி தீப்பிடித்து எரிந்தன. ஒரு வாகனத்திற்குள் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஓட்டுநர் ஒருவரும் விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் இரண்டு பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை.
என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM