Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.)
சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளின் கிரிக்கெட் போட்டியை காண வருபவர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பு செய்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து, இன்று (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா-ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டியை பார்க்க வருபவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பயணிக்க மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்துள்ளது.
கிரிக்கெட் போட்டி பார்க்க வருபவர்கள், தங்களது நுழைவுச்சீட்டை பயன்படுத்தி எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வேண்டுமானாலும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு பயணிக்கலாம். டிஜிட்டல் நுழைவு பயணச்சீட்டில் உள்ள கியூஆர்-கோர்டு குறையீடுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு எந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்க முடியும்.
கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஒரு சுற்றுப்பயணத்திற்கு (2 முறை உள்ளே, 2 முறை வெளியே)இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் வருவதற்கு முன்னதாகவே, பயணிகள் அனைவரும் தங்களது பயணச்சீட்டுகளை செல்போன் செயலி அல்லது இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM