Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 26 பிப்ரவரி (ஹி.ச.)
வடகோவை ரயில் நிலையம் பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை (பிப்ரவரி 27) மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (பிப்ரவரி 27-ஆம் தேதி )
பிற்பகல் 3.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616), அன்றைய தினம் மாலை 4.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும். மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில்
(எண்: 66617) ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, மார்ச் 1-ஆம் தேதி காலை 9.40 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூர்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66612), அன்றைய தினம் நண்பகல் 1.05 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமு ரயில்
( எண்: 66615) ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்:
பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக பிப்ரவரி 27-ஆம் தேதி நண்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது, சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிர்க்கப்படும்.
மார்ச் 1-ஆம் தேதி இயக்கப்படும் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில்
(எண்: 13352) மற்றும் எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் (எண்: 16378) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், போத்தனூர், இருகூர் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிர்க்கப்படும். போத்தனூர் கூடுதல் நிறுத்தமாக செயல்படும்.
என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b