Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 26 பிப்ரவரி (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் தாஜங்கி கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை முன்விரோதம் காரணமாக காரில் பின் தொடர்ந்து வந்த மற்றொருவர் காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிகர சம்பவம் பட்ட பகலில் பலர் கண் முன் பயமின்றி நடைபெற்றது.
ஆந்திர மாநிலம், தாஜங்கி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரராவ், தர்மராஜு ஆகியோருக்கிடையே சொந்த பிரச்சினை காரணமாக பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
எனவே, ஈஸ்வரராவை கொலை செய்து தன்னுடைய பகையை தீர்த்துக் கொள்ள முடிவு செய்த தர்மராஜூ, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஈஸ்வரராவை காரில் பின் தொடர்ந்து சென்றார்.
அப்போது, மோட்டார் சைக்கிள் மீது தன்னுடைய காரை மோத செய்தார் தர்மராஜூ. இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த ஈஸ்வரராவ் படுகாயமடைந்தார். அப்போதும் விடாத தர்மராஜூ, ஈஸ்வரராவ் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். தர்மராஜூ நடத்திய கொலை முயற்சியில் ஈஸ்வரராவ் படுகாயம் அடைந்தார்.
இந்த கொலை முயற்சி சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் சப்தம் போட்டு அபயக் குரல் எழுப்பினர். மேலும் சரிந்து விழுந்த ஈஸ்வரராவ் இறந்து விட்டதாக கருதிய தர்மராஜு தன்னுடைய முயற்சியை நிறுத்தினார்.
இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் தர்மராஜூவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொலை முயற்சிக்கான திட்டம் என்ன என்று விசாரணை நடத்துகின்றனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஈஸ்வரராவ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.
Hindusthan Samachar / GOKILA arumugam