பிரதமர் நரேந்திர மோடி  தமிழகம் வந்து சென்ற பிறகு எடப்பாடி பழனிசசாமி உடன் பேசி தொகுதி பங்கீட்டு குறித்து இறுதி செய்வோம் - நயினார் நாகேந்திரன்
சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மாநில தலைமை தேர்தல் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டப வளாகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் விதமாக பாஜக தேர்தல் தலைமை அ
Nai


சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.)

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மாநில தலைமை தேர்தல் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டப வளாகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் விதமாக பாஜக தேர்தல் தலைமை அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந் நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளது.

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக மாநில தலைமை தேர்தல் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து 20 அல்லது 30 எம்எல்ஏக்கள் செல்வார்கள் என்ன நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த வி பி துரைசாமி அமைச்சர்களே வருவார்கள் என தெரிவித்தார்.

உடனே இறைவன் ஆசிர்வாதம் இருந்தால் அமைச்சர்கள் வருவார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

ஐந்தாண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 50 சதவீதம், குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் 60%, லாக் அப் மரணங்கள், பத்தரை லட்சம் கோடி ரூபாய் கடன், கடன் பற்றி பேசினால் நாங்கள் மட்டுமா வாங்கினோம் அகில இந்திய அளவில் கடன் வாங்கி உள்ளீர்களே என சொல்லுகிறார்கள். தங்களுடைய நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்த தயாராக இல்லை.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தான் 5 ஆண்டுகால ஆட்சி நடந்து வருகிறது.

எல்லா மாவட்டங்களிலும் இன்றைக்கு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பணம் பதுங்கி விட்டது. ஓட்டிற்கு பணம் கொடுப்பதற்காக நாட்டை பற்றி கவலைப்படாமல் ஓட்டை பற்றி கவலையுடன் இருக்கிறது திமுக அரசு. அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசு. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு டிஜிபியை கூட நியமிக்க முடியாது இந்த அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்களும் இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.விழிகள் பிதுங்கிக் கொண்டிருக்கிறது.

கல்லூரிகளுக்கு புத்தகத்தை தூக்கி செல்லும் பிள்ளைகள் எல்லாம் கஞ்சாவை எடுத்துச் செல்கிறார்கள். பேக்கை திறந்து பார்த்தால் பீர் பாட்டில் உள்ளது. டாஸ்மாக்கில் அதிக வியாபாரம் இல்லை என அரசு கவலைப்படுகிறது. இந்த ஆட்சி முடிய வேண்டும் தமிழக மக்களுக்கு விடிய வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒற்றுமையோடு,அது இது என்று வேறுபாடு இல்லாமல், அந்தக் கட்சி இந்த கட்சி என்று சொல்லாமல் இன்றிலிருந்து எல்லோரும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஒருமித்த கருத்தோடு பயணிக்க வேண்டும். அதன் மூலம் நாட்டு மக்களுக்கு விடிவை ஏற்படுத்த வேண்டும். ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் உழைக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சாலைகள், விமான போக்குவரத்து, ரயில்கள் என 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் தமிழகத்திற்கு திட்டங்களை கொடுத்துள்ளார். என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசியது,

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா அவர்களால் உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ,புதிய நீதி கட்சி, ஐ ஜே கே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஃபார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம்.

நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஆட்சி அகற்றப்பட வேண்டும்,இது மக்களுக்கான ஆட்சி இல்லை,அவர்களின் குடும்பத்திற்கான ஆட்சி.இந்த ஆட்சியில் சட்டஒழுங்கு சரி இல்லை.கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவர்கள் கஞ்சா மற்றும் கத்தியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள், பெண்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை.

அண்ணா யுனிவர்சிட்டி, அரக்கோணம் ஆகிய எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள் அடுத்த வருஷம் செல்கிறேன் என்று சொல்கிறார்கள். அடுத்த வருஷம் இபிஎஸ் தான் முதலமைச்சர். எப்படி எல்லாம் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

எம் எல் ஏக்கள் வருவார்கள் இறைவன் ஆசி இருந்தால் அமைச்சர்களும் வருவார்கள் என கூறியுள்ளீர்களே திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிகாரத்தில் பங்கு கேட்பது போல தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக அதிகாரத்தின் பங்கு வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறதா, என்ற செய்தியாளரின் கேள்விக்கு.

எங்களுக்குள் எந்த பிடிவாதமும் கிடையாது, எங்களின் ஒரே நோக்கம் திமுக ஆட்சியை அகற்றுவது மட்டுமே.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வந்து சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் பேசி தேசிய தலைமையின் அறிவுறுத்தலின்படி தொகுதி பங்கிட்டு உறுதி செய்வோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பவர்கள் வெரைட்டி வெரைட்டியாக பொய் சொல்கிறார்கள் என முதலமைச்சர் விமர்சனம் செய்துள்ளார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு,

தமிழகத்தில் கஞ்சா இருக்கிறதா இல்லையா? இதில் எங்கு நாங்கள் பொய் சொன்னோம்.

தமிழகத்தில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் மின் கணக்கீட்டை மாதத்திற்கு ஒரு முறை என மாற்றம் செய்யப்படும் என சொன்னார்கள். செய்யவில்லை யார் பொய் சொல்வது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர்க்கும் உரிமைத்தகி கொடுப்பதாக சொல்லிவிட்டு ஒரு கோடி 31 லட்சம் பேருக்கு மட்டுமே கொடுக்கிறார்களே. யார் பொய் சொல்வது.

முதலமைச்சர் பொய் சொல்கிறாரா? அல்லது பிரதமர் அவர்கள் பொய் சொல்கிறார்களா?

பிரதமர் அவர்கள் கடந்த ஆண்டு நாலாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொடுத்துள்ளார். இந்த வாரத்தில் கூட 1700 கோடி ரூபாய் தூத்துக்குடிக்கு கொடுத்துள்ளார்.

ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என பிரதமர் சொன்னதாக முதலமைச்சர் சொல்கிறாரே,

வங்கி கணக்கில் போடுவோம் என யாரும் சொல்லவில்லை. வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை எடுத்தால் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கும் அளவிற்கு வெளிநாடுகளில் கருப்பு பணம் உள்ளது அதனை வெளிக்கொண்டு வருவோம் என்று தான் பிரதமர் சொன்னார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 60% நிதியை மத்திய அரசு கொடுக்கிறது.

வீடு கட்டுவதற்கு, குடிநீர் இணைப்பை ஏற்படுத்தும் ஜல்ஜீவன் திட்டம், ரேஷன் பொருட்கள் மத்திய அரசு கொடுக்கிறது.

அதற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு இருக்கிறார்கள். என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ