Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச)
தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும் என எஸ்.ஆர்.பி மற்றும் டி.ஆர்.பி தேர்வுகள் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கூட்டுறவுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக SRB மற்றும் DRB தேர்வுகள் நடத்தப்பட்டு 100 நாட்களாகிவிட்டன.
உதவிப் பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் TRB தேர்வு நடத்தப்பட்டு 60 நாட்களாகிவிட்டன. ஆனால், இவ்விரண்டு தேர்வுகளுக்கான முடிவுகளை இன்றுவரை வெளியிடாமல், இளைஞர்கள் எதிர்காலத்தோடு விளையாடி வருகிறது திமுக அரசு.
கொடுத்த வாக்குறுதிப்படி அரசுத் துறைகளில் 5.5 காலிப்பணியிடங்களை நிரப்பும் திறன்தான் திமுக அரசிடம் இல்லையென்றால், உடனுக்குடனேயே தேர்வு முடிவுகளை வெளியிடும் திறன்கூட இல்லையா? அல்லது, தேர்வு முடிவுகளை வெளியிடாமலேயே, அரசுப்பணிகளை விற்று திமுக அரசு கல்லா கட்டிவிட்டதா?
மாதக்கணக்கில் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சிக்கும் மெத்தன திமுக அரசுக்கு, மாதந்தோறும் ஒரு வெற்றுப் பெருமை விழா நடத்துவது ஒன்று தான் கேடு, கல்விக் கடனையும் ரத்து செய்யாமல் வேலைவாய்ப்பையும் வழங்காமல் தவிக்கவிடும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் முடிவு கட்டுவர் தமிழக இளைஞர்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ