Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை தாம்பரத்தில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வேயின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11வது நடைமேடை பணிகள் காரணமாக, எழும்பூரில் ரயில் போக்குவரத்தில் நெருக்கடியை குறைக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் வண்டி எண்12661 மார்ச் 2ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.
நெல்லை - சென்னை எழும்பூர் நெல்லை விரைவு ரயில் வண்டி எண் 12632 மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும். எழும்பூர் செல்லாது. இந்த ரயில் காலை 6.25 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இதே போல சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் விரைவு ரயில் வண்டி எண் 22675 சென்னை எழும்பூரில் இருந்து வருகிற பிப்.28ம்தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 2 மணி 15 நிமிடங்கள் தாமதமாக இரவு 10.15 மணிக்கு புறப்படும்
என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b