மெழுகுவர்த்தி கம்பெனி நடத்துவதாக கூறி வாடகைக்கு எடுத்த கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்
நெல்லை, 26 பிப்ரவரி (ஹி.ச.) நெல்லை மாவட்டம் முத்தூர் பகுதியில் சுடலைக்கண்ணு என்பவருக்கு சொந்த மன கட்டிடத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதிக்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்படி சிவந்திபட்டி காவல்துறையினர் மற்றும் வ
கைது


நெல்லை, 26 பிப்ரவரி (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் முத்தூர் பகுதியில் சுடலைக்கண்ணு என்பவருக்கு சொந்த மன கட்டிடத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதிக்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்படி சிவந்திபட்டி காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு தடைவுகள் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேற்று கட்டிடத்தில் அதிரடியாக சென்ற சோதனை நடத்தியுள்ளனர்.

இதில் கல்குவாரிகளுக்கு பயன்படுத்தப்படும் வெரி பொருட்கள் உடன் திரி தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு எந்திரங்கள் மூலம் 80 கிலோ வெடிப்பொருட்கள் 40 கிலோ திணை ஆகியவை பதிக்க வைக்கப்பட்டிருந்தன. இதை எடுத்து இவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து கட்டிட உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட இதில் மெழுகுவர்த்தி கம்பெனி நடத்தப் போவதாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மாத வாடகைக்கு எடுத்ததாக அவர் தெரிவித்தார் வாடகைக்கு வீடு எடுத்து வெளி பொருட்களை பயன்படுத்தி கல்குவாரிக்கு தேவையான திரிகள் உள்ளிட்ட சட்டவிரோதமாக தயாரித்து வந்த விவகாரம் இதில் அம்பலமானது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர்.

மக்களிடம் உள்ள பகுதியில் வெளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam