இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் 10 கோடி பின்தொடர்பவர்கள் - ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ள பிரதமர் மோடி
புதுடெல்லி, 26 பிப்ரவரி (ஹி.ச.) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 மில்லியன் (10 கோடி) நபர்களைப் பின்தொடர்பவர்களாகக் கொண்ட முதல் அரசியல் தலைவர் எனும்
இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் 10 கோடி பின்தொடர்பவர்கள் - ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ள பிரதமர் மோடி


புதுடெல்லி, 26 பிப்ரவரி (ஹி.ச.)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

அதாவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 மில்லியன் (10 கோடி) நபர்களைப் பின்தொடர்பவர்களாகக் கொண்ட முதல் அரசியல் தலைவர் எனும் புகழை அவர் அடைந்துள்ளார்.

பிரதமர் மோடி 2014-ல் இன்ஸ்டாகிராமில் இணைந்து, தொடர்ந்து அதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். உலக நாடுகளின் தலைவர்களுள் இவருக்குத்தான் மிக அதிகமான (இன்ஸ்டாகிராம்) பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

அவரை அடுத்து இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 15 மில்லியன், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா 14.4 மில்லியன், துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் 11.6 மில்லியன், அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய் 6.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM