தாராபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு - ஏகே-47 துப்பாக்கியுடன் மத்திய ரிசர்வ் காவல் படை ரோந்து
திருப்பூர், 26 பிப்ரவரி (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பதட்டமான பகுதியாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், டெல்லியைச் சேர்ந்தமத்திய
T


திருப்பூர், 26 பிப்ரவரி (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பதட்டமான பகுதியாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில், டெல்லியைச் சேர்ந்தமத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) வீரர்கள் மத்திய ரிசர்வ் படை ஆய்வாளர் மனோஜ் ரஞ்சன் கோனார் தலைமையில் தாராபுரம் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் முன்னிலையில் 44 வீரர்கள் அதிர வைக்கும் பேரணியை நடத்தினர்.

தாராபுரம் காவல் நிலையத்திற்கு வருகை தந்தனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள், நகரில் பதட்டமாக கருதப்படும் முக்கிய இடங்களை சுட்டிக்காட்டினர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டருடன் இணைந்து மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் நகரின் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு அணிவகுப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஏகே-47 துப்பாக்கி, இன்சாஸ் ரைபிள் மற்றும் பல்வேறு வகையான கைத்துப்பாக்கிகளுடன் வீரர்கள் பெரிய கடை வீதி, அண்ணா சாலை, சர்ச் சாலை, தாலுகா அலுவலக சாலை, புதிய காவல் நிலைய வீதி உள்ளிட்ட பகுதிகளில் அணி வகுப்பு நடத்தினர்.

இந்த திடீர் பாதுகாப்பு நடவடிக்கையால் தாராபுரம் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் இடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசுபொருளாக மாறியுள்ளது.

நகரில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / Durai.J